தேவையான பொருள்கள்:
சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோ
தண்ணீர்- 2 டம்ளர்
மோர்- 2 டம்ளர்
சிறிய வெங்காயம்-10
உப்பு- கொஞ்சம்
மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4
செய்முறை:
சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும். [பச்சை தண்ணீரில் மாவை கலந்தால் கட்டி தட்டாமல் வரும்.] அடுப்பை சிம்மில் எரியவிடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும். தண்ணீரில் கையை தொட்டு வெந்த மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். அது கெட்டியான களியாக இருக்கும்.நன்கு ஆறிய பின்போ[அ] அடுத்த நாளோ அதில் சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிபோட்டு மோர்மிளகாயை கலந்து உப்பு, மோரை நன்கு தண்ணியாக கடைந்து அதில் ஊற்றி சாப்பிடலாம். உடலுக்கு வெயில் காலத்தில் குளிர்ச்சியை தரும் இந்த கம்பு கூழ்.
ரொம்ப நன்றி.
ReplyDeleteகம்புக்கு நிகரான ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வார்த்தை என்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.
எனக்குத் தெரியவில்லை. கம்பின் படம் ஒன்று உள்ளது. விருப்பமிருப்பின் காண்க - http://cdn.wn.com/o25/ph//2008/06/17/d4a7df88f13bdd1266a901b6e87704d9-grande.jpg
ReplyDelete'Peal Millet' is the English word for kambu
ReplyDelete'bajira' in hindhi
ReplyDelete