1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.
2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு சாலட் செய்து சாப்பிடவும். கடுகு தாளித்து, கொஞ்சம் தயிர் போட்டு கலந்து தயிர் பச்சடியாக சாப்பிடவும். மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.
4.வெயில் காலத்தில் அடிக்கடி சூடு பிடிக்குதா தண்ணீரை சூடு செய்து கொஞ்சம் காசி கட்டியை கலந்து ஆற வைத்து குடித்தால் எல்லா இன்ஃபெக்ஷனும் ஓடி போய் விடும். இது நல்ல மருத்துவகுணம் உள்ளது. தலைவலி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இந்த தண்ணீரை குடிக்கலாம்.
5. வெள்ளரிக்காயை துறுவி கொண்டு அதில் மிளகுதூள், ஏலக்காய்பொடி கலந்து சாப்பிட்டாலும் நீர்கடுப்பு வராது.
6. வெள்ளரிக்காய்= மாதுளைதோல் இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்தாலும் நீர்கடுப்புக்கு நல்லது.
7.வெயில் காலத்தில் மோர் குடிக்கும்போது அடிக்கடி பச்சைமிளகாயை சேர்த்தால் சூடு அதிகம் ஆகும். அதற்குபதில் இஞ்சி,கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம்,உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கலாம்.
8. வெயில் காலத்தில் கத்தரிக்காய் சாபிட்டால் உடல் சுடு அதிகம் ஆகும்.கீரை அதிகம் சேர்த்து கொள்ளவும். கூடிய வரை மசாலா பொருட்களை கோடை காலத்தில் அதிகம் சேர்க்கவேண்டாம்.
9. வெயிலில் வரும் வேனல் கட்டிகளுக்கு சந்தனமும்+மஞ்சளும் கலந்து பூசி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.
10. காலையில் 4-பேரிச்சைபழம்,கிஸ்மிஸ் பழம்-4,1-ஸ்பூன் கசகசா இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு இன்னும் தேவைஎனில் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம்.
11. குடி நீர் இருக்கும் பாத்திரத்தில் குறுமிளகு,கொஞ்சம் வெட்டிவேர்,சீரகம், பனங்கல்கண்டு போட்டு சூடு செய்து அதையே அன்று முழுவதும் குடிக்கலாம். [வெறும் தண்ணீருக்கு பதிலாக] அந்த நீர் அன்றன்று புதியதாக போட்டு கொள்ளனும்.முதல் நாள் தண்ணீர் இருந்தால் கீழே கொட்டி விடவும்.
12.முட்டை கோஸ் அதிகமாக சாப்பிடவும். பொடியாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய்+உப்பு+ மிளகுதூள் போட்டு சாலட் போல் சாப்பிடவும். தக்காளி, பெரிய வெங்காயமும் சேர்த்து சாப்பிடலாம்.
13.சோப் தேய்த்து குளிப்பதற்க்கு பதிலாக மஞ்சள்+சந்தனதூள்+பன்னீர்[அ] கடலைமாவு+பன்னீர்+தயிர் இதில் ஏதாவது ஒன்றை கலந்து தேய்த்து கொஞ்ச நேரம் ஊறியபின் குளிக்கவும்.
14.சந்தனம் + மஞ்சள் + பன்னீர் பேஸ்ட் அருமையான சன்ஸ்க்ரீனும் கூட. இதை தடவி குளித்து விட்டு வெளியில் போனாலும் சூரியனின் சூடு தெரியாது.
வியர்குருவின் மேல் இந்த பேஸ்டை போட்டு சில நாள் குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்.
15.குளிக்கும் நீரில் கொஞ்சம் தினமும் பன்னீர் கலந்து குளித்தால் உடம்பு வாசனையாக இருக்கும்.வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 2[அ] 4 முறைகூட குளிக்கலாம். வேர்வை நாற்றம் வராது. வெட்டி வேரை கொஞ்சம் முதல் நாளே குளிக்கும் நீரில் போட்டு வைத்தும் குளிக்கலாம்.
No comments:
Post a Comment