Monday, November 5, 2007

சுண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் பிஞ்சானது - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 6
புளி விழுது - 2 ஸ்பூன்
பெருங்காயம், மஞ்சள்தூள், 1/4, ஸ்பூன்,
தாளிக்க கடுகு, உப்பு தேவையான அளவு,

செய்முறை:

துவரம்பருப்பை லேசாக வறுத்து குழைய வேகவிடவும். சுண்டைக்காயை பளாஸ்டிக் கவரில் போட்டு குழவிக்கல்லால் தட்டினால் விதை தனியாக வந்துவிடும்.அதை புளி விழுதில் கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி வைக்கவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, ஊளுத்தம்பருப்பு,பெருங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதங்கியதும், தக்காளியை போட்டு, உப்பு சேர்த்து வதங்கியபின் சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும. பச்சை வாசனை போன பின் வேகவைத்த பருப்பை சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சுண்டைக்காயை பொடியாக நறுக்கியும் செய்யலாம். கொஞ்சம் பொறுமை வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும், ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி. அடிக்கடி செய்து சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் ஏதும் வராது.

3 comments:

  1. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவை உங்கள் அனுபவப் பதிவுகளா இல்லை வேறு நூல்கள், தளங்கள் எதையும் பார்த்து பகிர்கிறீர்களா என்று அறிய ஆவல். நன்றி.

    ReplyDelete
  2. Hi Ravi,

    Yes, its all my mom's own recipes.

    Thanks,
    Arun

    ReplyDelete