Friday, December 21, 2007

மைக்ரோவேவ் சமையல் உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை - 1 கப்
சுடு நீர் - 2.5 கப்
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறியதுண்டு
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பருப்புகளை கலந்து, ஓவன் பாத்திரத்தை கொஞ்சம் மூடி, ஹையில் 2 நிமிடம் வைக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் வைக்கவும். பின் வெளியே எடுத்து சுடுநீர் சேர்த்து, உப்பும் சேர்த்து ரவையும் போட்டு கலந்து மூடாமல் ஹையில் 8 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து கொஞ்சம் எண்ணெய், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும். பின் 1 நிமிடம் ஒவனில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.

1 comment:

  1. //சுடு நீர் - 2.5 கப்
    பெரியவெங்காயம் - 2
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி - சிறியதுண்டு
    உப்பு - 1 ஸ்பூன்
    தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்//

    ஒரு கப் ரவைக்கு இவ்ளோ அதிகமான அளவிலா இதை எல்லாம் சேர்க்கனும்? :(

    பெரிய வெங்காயம் 2 ரொம்ப அதிகம் இல்லயா?

    நான் இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கேன். அதான் டவுட்டு.. தப்பா எடுத்துக்காதிங்க.. :)

    ReplyDelete