Saturday, March 1, 2008

பிரெட் டோஸ்ட்

தேவையான பொருள்கள்:

சால்ட் பிரெட்- 1 பாக்கெட்
உருளைக்கிழங்கு- 1/2 கிலோ
இஞ்சி- சிறிய துண்டு
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-5 [அ] 8
வெண்ணெய்[ அ] எண்ணெய்

செய்முறை:

உருளைகிழங்கை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு,சீரகம் தாளித்துஇஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். உருளை கிழங்கில் உப்பு போட்டு வேக வைப்பதால் அதனால் ஏற்படும் வாய்வு தொல்லை வராது. கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்து அதனுடன் சேர்க்கவும். இதை ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு பிரெட்டில் தடவி மற்றொரு பிரெட்டை மூடி தோசைகல்லில் போட்டு வெண்ணெய்[அ] எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு பொன் கலரில் எடுத்து சாப்பிடவும். மைக்ரோ அவன் இருந்தால் அதில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.

2 comments:

  1. ஆண்டி...கேட்கவே நன்றாகவுள்ளது...அனால் பிரெட் எண்ணையிழுத்து உடலுக்குக் கேடு விளைவிக்குமல்லவா? அதனால் rice bran oil பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  2. அருமை மிகவும் அருமை

    ReplyDelete