Wednesday, July 22, 2009

டிப்ஸ்

1. தோசை மாவு குறைவாக இருந்தால் தேவையான சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இருக்கும் மாவையும் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்துவிடும். அதில் தோசை வார்த்தால் நன்கு முறுகலான தோசை வரும்.

2. கொழுக்கட்டைக்கு மாவுக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் கொழுக்கட்டை விரியாமல் அழகாக வரும்.

3. சாம்பாரில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் 4 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இல்லையெனில் கொஞ்சம் தேங்காயுடன் 1 ஸ்பூன் மல்லி[ தனியாவை] மிக்ஸியில் அரைத்து கலந்தாலும் உப்பு குறையும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு சாம்பாரில் போடலாம். பரிமாறும் சமயம் உப்பு அதிகம் இருந்தால் உடனே ஒரு கப் பால் கலந்து பரிமாறவும். ஆனால் பால் கலப்பதால் இந்த சாம்பாரை உடனே சாப்பிட்டுடனும். அதிக நேரம் இருந்தால் கெட்டு விடும். அதனால் பரிமாறும் அளவுக்கு சாம்பாரில் பால் கலந்து கொள்ளலாம்.

4. சாதம் குழைவாக வேண்டும் என்று விரும்பினால அரிசியை 1 மணி நேரம் முன்பாகவே நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு 1பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கலாம். உதிராக வேண்டும் எனில் 1பங்கு அரிசிக்கு 2/12 அளவு தண்ணீர் சேர்க்கலாம். அரிசி ஊறுவதால சாதம் குழையாது. உதிராகவும் இருக்கும். சாப்டாகவும் இருக்கும்.

5. உளுந்து வடை செய்யும் போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் தேவையான அளவு அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கலந்து வடை தட்டவும். உப்பு போட மறக்க வேண்டாம்.

6. பாகற்க்காய் பொரியலுக்கு [ கசப்பு சுவை பிடிக்காதவர்கள்] நறுக்கி கொஞ்ச மஞ்சள்பொடி, உப்பு, புளிசாறு [அ] 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஊறவைத்து 1/2 மணி நேரம் கழித்து பொரியலோ, அதில் எது செய்தாலும் கசக்காது.

7. சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவை வறுத்து அதிகமான தண்ணீர் ஊற்றி பாதி வேகும் சமயம் அடுப்பை அணைத்து குளிர்ந்த தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கலந்து வடிக்கவிட்டு செய்தால பாயசம் குழையாமல் சேமியாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சேமியா பாயசம் சூப்பராக இருக்கும்.

8. சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு கிரேவி செய்தால் முதலில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு கரைந்து பொன்கலரில் வரும் போது தக்காளி, வெங்காயம் என்று அவரவர் செய்யும்படி செய்யவும். இப்படி செய்யும்போது கலரும் வரும். டேஸ்டும் சூப்பராக இருக்கும்.

9. வெண்டைக்காயை பொரியல் செய்ய சிறிது நேரம் முன்பாகவே நறுக்கி தட்டில் பரப்பி ஃபிரிஜ்ஜில், [அ] வெயில் இருந்தால் கொஞ்ச நேரம் வைத்து பொரியல் செய்தால் சீக்கிரமும் வதங்கிடும். எண்ணெயும் குறைவாக ஆகும். வழுவழுப்பும் இருக்காது.

10. பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் குறுனையாக உடைத்து குக்கரில் பாலும் தண்ணீரும் கலந்து நன்கு வேகவிட்டு, வெந்தபின் மேலும் பால் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

11. குருமா, பிரியாணிக்கு முதலில் வாசனை பொருட்களை போட்டு, வெங்காயத்தை சேர்த்து வதங்கியபின் பூண்டை சேர்த்து வதக்கினால் வாசனை நன்றாக இருக்கும். முதலிலேயே பூண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்து கருகிவிடும்.

12. பஜ்ஜி செய்யும் போது கடலைமாவு- 1 கப், அரிசி மாவு- 1/2 கப், பொட்டுகடலை மாவு- 1/2 கப் அளவில் போட்டு நன்கு தேவையான ஊப்பு, மிளகாய் பொடி,பெருங்காய பொடி, தேவையான தண்ணீர் கலந்து பஜ்ஜி செய்தால் நன்கு உப்பி வரும்.

13. பயறுகள், பருப்புகளை ஊற விடும் போது 2 முறை நன்கு கழுவிய பின் ஊற வைக்கவும். வேகவிடும்போது அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரில் வேக வைக்கவும்.

3 comments:

  1. உங்கள் ப்ளாக் நல்ல ப்ளாக்

    ReplyDelete
  2. // தோசை மாவு குறைவாக இருந்தால் தேவையான சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இருக்கும் மாவையும் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்துவிடும். அதில் தோசை வார்த்தால் நன்கு முறுகலான தோசை வரும்.//

    நல்ல டிப்ஸ்...உங்கள் ப்ளாக் நல்லா இருக்கு..அதிலும் டிப்ஸ் எல்லாம் கலக்கல்.

    என்னுடைய ப்ளாக் பக்கம் நேரம் இருக்கும் பொழுது வாங்க..http://geethaachalrecipe.blogspot.com/

    ReplyDelete
  3. //கொழுக்கட்டைக்கு மாவுக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் கொழுக்கட்டை விரியாமல் அழகாக வரும//


    //உளுந்து வடை செய்யும் போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் தேவையான அளவு அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கலந்து வடை தட்டவும். உப்பு போட மறக்க வேண்டாம்//

    சூப்பர் சித்ரா உங்கள் அனைத்து டிப்ஸும் அருமை.

    ReplyDelete