Saturday, May 10, 2008

உருளை சப்ஜி

தேவையானவை:

சிறியதாக உள்ள உருளைகிழங்கு- 1/4கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி- 1
தயிர்- 1/4 கப்
பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1.5 ஸ்பூன்
கறிமசால்பொடி-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையானவை.

செய்முறை:

உருளைகிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து,இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயத்தைபோட்டு வதக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வதக்கவும். மஞ்சள்பொடி, கறிமசால்பொடி, மிளகாய்பொடி உப்பு போட்டு நன்கு வதக்கவும். பின் உருளைகிழங்கையும் போட்டு நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது தயிரை ஊற்றி மல்லி இலை போட்டு கிளறி இறக்கவும். உருளை சப்ஜி தயார்.

1 comment:

  1. பயனுள்ள எளிமையான விளக்கங்கள். எனக்கு சமைக்கத் தெரியாதுனாலும் கல்யாணத்துக்கப்பறம் வீட்டுக்காரம்ம்மாவுக்கு உதவிசெய்ய தேவைப்படும்ல்ல.. குறிப்பு எடுத்துக்கறேன்:P

    நன்றிகள்:)

    ReplyDelete