Thursday, January 24, 2008

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையான பொருள்கள் :

மாகாளிக் கிழங்கு- 1/2 கிலோ
புளித்த தயிர்- 1/4 லிட்டர்
மிளகாய்தூள்- 100கிராம்
கடுகு பொடி- 1/4 கப்
உப்பு- 200கிராம்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

மாகாளிக் கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு ஊறியபின் மண் போக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, தயிரில் எல்லா பொருள்களையும் போட்டு நன்கு கலந்து அதில் கிழங்கை போட்டு ஊறவிடவும். தினமும் நன்கு கிளறி கலந்து விடவும். கைபடாமல் இருந்தால் எத்தனை மாதமோ, வருடமோ ஆனாலும் கெடாது. சாப்பிடும் போது சிறிய கிண்ணத்தில் தேவையானதை எடுத்து பயன் படுத்தவேண்டும்.

3 comments:

  1. இத்துடன் கொழுந்தான பிரண்டைத் துண்டுகளையும் போட்டு வைத்த்து உண்பதை சொல்ல மறந்து விட்டீர்கள் தானே?

    ReplyDelete
  2. இல்லை, அதனுடன் எதை கலந்தாலும் அதன் ஒரிஜனல் சுவை மாறி போகும். ஆதலால் நான் அதை பற்றிச் சோல்லவில்லை. அதனுடன் பட்டை அவரக்காய் போல் ஒன்றை பொடியாக நறுக்கி போடுவார்கள். அதை போட்டால் மாகாளி கிழங்கின் வாசனை அடிப்பட்டு போகும்.

    ReplyDelete