Monday, November 5, 2007

வெந்தய களி

தேவையான பொருட்கள்:

வெந்தயம் -1 கப்
பனை வெல்லம் [எ] கருப்பட்டி தூள் செய்தது - 2 .5 கப்
நல்லெண்ணெய் - 1 கப்

செய்முறை:

வெந்தயத்தை [2,3] முறை நன்கு மண் போக கழுவிமுதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.காலையில் வடிக்கட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக [வடைக்கு அரைப்பதுபோல்] அரைக்க வேண்டும். தூள் செய்த பனை வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து, அதனுடன் அரைத்த வெந்தயத்தை போட்டு அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அதில் வெந்தய விழுது, வெல்லபாகு ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.வாணலியில் ஒட்டாத பதம் வரவெண்டும். இதை சூடாகவே சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் பல நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் வரவே வராது. வெந்தயத்தில் உள்ள வழுவழுப்பான பொருள் எலும்புகள் தேயாமல், மூட்டு வலிகள் வராமலிருக்கும். இடுப்புக்கு வலு கொடுக்கும். தோல் சுருக்கம் வராது. ஊளை சதை குறையும். இன்னும் பல நன்மைகள் வெந்தயகளிக்கு உண்டு.

1 comment:

  1. சின்ன வயதில் வெந்தயக்களி சாப்பிட்டது, செய்து தந்த அத்தை இன்று இல்லை, இன்று இது படிக்கவும் ஏற்பட்ட மகிழ்வு ..........நன்றி.

    ReplyDelete